உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மக்கள் குறைதீர் கூட்டம் 392 பேர் மனு ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 392 பேர் மனு ஏற்பு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வியிடம், 392 பேர் பல்வேறு கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர். காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ஆக்கிரமிப்பு, ரேஷன் அட்டை, பட்டா என பல்வேறு வகையிலான கோரிக்கை தொடர்பாக, 392 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், இரண்டு திருநங்கையருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கி, பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம், கலெக்டர் கலைச்செல்வி மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை