மேலும் செய்திகள்
தெருவிளக்கு வசதி ஏற்படுத்த கோரிக்கை
27-Feb-2025
வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 2வது வார்டு உறுப்பினர் அசோக்குமார், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,வாலாஜாபாதில் இருந்து, ஒரகடம், படப்பை வழியாக, சென்னை செல்லும் பிரதான சாலை உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து இச்சாலை வழியாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை மற்றும் சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிளுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வாகனங்கள் வாயிலாக பயணிக்கின்றனர்.இச்சாலையில், வாலாஜாபாத் வட்டார அரசு மருத்துவமனை அடுத்து ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்திற்கான சாலையில் போதுமான தடுப்புசுவர் மற்றும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தாமல் இருந்து வருகிறது.இதனால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, வாலாஜாபாத் ரயில்வே பாலம் மீது, விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, உயர்கோபுர மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
27-Feb-2025