காட்டாங்குளம் ஊராட்சிக்கு கனவு இல்லம் வீடு வழங்க மனு
உத்திரமேரூர், காட்டாங்குளம் ஊராட்சிக்கு, 'கனவு இல்லம்' வீடு வழங்க, மக்கள் குறை தீர் கூட்டத்தில் கலெக்டர் கலைச்செல்வியிடம் ஊராட்சி தலைவர் செல்வகுமரன் மனு அளித்தார்.மனு விபரம்:உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சியில், 2025 --- 26 ஆண்டுக்கான, 'கனவு இல்லம்' வீடு வழங்க, இரண்டு மாதத்திற்கு முன் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அப்போது, மாற்றுத்திறனாளிகள் உட்பட 17 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஆனால், வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.எங்கள் ஊராட்சிக்கு, 'கனவு இல்லம்' வீடுகள் வழங்காமல் இருப்பதால், விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட பயனாளிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, மாற்றுத்திறனாளிகள் உட்பட 17 பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, வீடு கட்ட பணி ஆணை வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.