உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குறைந்த மின்னழுத்த பிரச்னை தீர்வு காண கலெக்டரிடம் மனு

குறைந்த மின்னழுத்த பிரச்னை தீர்வு காண கலெக்டரிடம் மனு

சிறுமையிலுார், உத்திரமேரூர் ஒன்றியம், சிறுமையிலுார் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி என்பவர், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வியிடம் மனு அளித்தார்.மனு விபரம்:சிறுமையிலுார், புதிய காலனி, மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் 90 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில், சில மாதங்களாக இரவு மற்றும் பகல் நேரங்களிலும் குறைந்த மின்னழுத்த பிரச்னை நிலவுகிறது.தொலைக்காட்சி பெட்டி மற்றும் குளிர் சாதனப் பெட்டி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதாகின்றன.எனவே, சிறுமையிலுார் கிராமத்தில் நிலவும் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி