உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 1,000 மரக்கன்றுகள் நடவு

1,000 மரக்கன்றுகள் நடவு

விஷார்:காஞ்சிபுரத்தில் இருந்து கீழ்கதிர்பூர், விஷார் வழியாக பெரும்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஆங்காங்கே சேதமடைந்து உள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் விடுத்து வந்தனர்.இதை தொடர்ந்து, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டம் 2024 - 25ன் கீழ், 7 மீட்டர் அகலத்திற்கு, 9.6 கி.மீ., நீளத்திற்கு புதிதாக சாலை அமைக்கப்பட்டது.புதிதாக அமைக்கப்பட்ட சாலையில், விஷார் கிராமத்தில் இருந்து மேட்டுகுப்பம் ஏரிக்கரை, மேல்திர்பூர் பட்டு பூங்கா வரை உள்ள சாலையோரம், நிழல் தரும் வகையில், 1,000 மரக்கன்றுகள் நடவு செய்ய நெடுஞ்சாலைத்துதறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.அதன்படி, சாலையோரத்தில் 5-6 அடி உயரமுள்ள நீர்மருது, மகாகனி ஆகிய மரக்கன்றுகள் நடும் பணியில், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை