மேலும் செய்திகள்
கணபதிபுரம் சாலையோரம் 10,000 பனை விதைகள் நடவு
15-Aug-2025
பள்ளபாளையம் குளத்தில் 750 பனை விதைகள் நடவு
18-Aug-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, பசுமை புரட்சியில் எங்கள் முயற்சி மற்றும் பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பு சார்பில், காஞ்சிபுரம் தேனம்பாக்கம் ஏரிக்கரையில் 1,550 பனை விதைகள் நடும் விழா நடந்தது.இதில், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி, காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி சங்க நிர்வாக இயக்குநர் முருகேஷ், மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சங்கர் ஆகியோர் 1,550 பனை விதைகள் நடும் விழாவை துவக்கி வைத்தனர். இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்கள், மகிழம், சர்வம், காஞ்சி அன்னசத்திரம், வடலி, பசுமை தேடி, போதிபகவன், ஜானஸ் குளோபல் பள்ளி மாணவர்கள், காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் இணைந்து 1,550 பனை விதைகளை நடவு செய்தனர். பசுமை புரட்சியில் எங்களின் முயற்சி அமைப்பின் நிறுவனர் மகேந்திரன் வரவேற்றார். பசுமை இந்தியா தன்னார்வ அமைப்பின் நிறுவனர் பசுமை மேகநாதன் நன்றி கூறினார்.
15-Aug-2025
18-Aug-2025