உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அஞ்சல் ஆயுள் காப்பீடு பிப்., 1ல் சிறப்பு முகாம்

அஞ்சல் ஆயுள் காப்பீடு பிப்., 1ல் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், பிப்., 1ம் தேதி, அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என, அஞ்சல் துறை அறிவித்து உள்ளது.இதுகுறித்து, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறியதாவது:காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இரு தலைமை தபால் நிலையம் மற்றும் துணை தபால் நிலையங்கள் இயங்கி வருகின்றன.இதில், 141வது தேசிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தினத்தை முன்னிட்டு, அந்தந்த தபால் நிலையங்களில், பிப்., 1ம் தேதி சிறப்பு காப்பீடு முகாம்கள் நடைபெற உள்ளன.இந்த சிறப்பு முகாமில், படித்து பட்டம் பெற்றவர்கள் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை