உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பணி நீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம்

பணி நீக்கம் செய்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடத்தில் ஜே.பி.எம்., எனும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான உதிரி பாகம் தயாரியம் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இதில், 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில், 2019ம் ஆண்டு, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் தொடங்கிய, ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 40 தொழிலாளர்களை, நிர்வாகம் பணியிடம் நீக்கம் மற்றும் பணிமாற்றம் செய்தது.இதை தொடர்ந்து, சி.ஐ.டி.யு., தொழிற்சங்கம் சார்பில், தொழிலாளர் தீர்ப்பாயத்தில் தொடரபட்ட வழக்கில், 40 தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என, கடந்த ஆண்டு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில், ஓராண்டை கடந்தும் இதுவரை தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை கண்டித்து, சி.ஐ.டி.யு., மாநில செயலர் முத்துகுமார் தலைமையில் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், ஒரகடம் மேம்பாலம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நீதிமண்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும், வேலை மறுக்கப்பட்ட காலத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை உற்பத்தியில் ஈடுபடுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். ஒரகடம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை