| ADDED : ஜன 24, 2024 10:10 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி ஊராட்சியில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடந்த இம்முகாமில், பல்வேறு துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.இம்முகாமை முன்னிட்டு, ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அம்மனுக்களை பரிசீலனை செய்து, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, ஜாதிச்சான்று, குடும்ப அட்டை, மகளிர் சுய உதவிக்குழு வங்கிக்கடன், தொழில் கடன் மானியம் என, 110 பயனாளிகளுக்கு, 1.14 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் வருவாய்த் துறை ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அரசு சார்ந்த பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.