உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி கோவில்களில் ரதசப்தமி உற்சவம் சூரிய, சந்திர பிரபையில் சுவாமி உலா

காஞ்சி கோவில்களில் ரதசப்தமி உற்சவம் சூரிய, சந்திர பிரபையில் சுவாமி உலா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தை மாத அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய சப்தமி திதியன்று ரதசப்தமி உற்சவம் நடைபெறும்.அதன்படி ரதசப்தமியான நேற்று, காலை 7:30 மணிக்கு, வரதராஜ பெருமாள், சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9:00 மணிக்கு திருக்கோவிலுக்கு வந்தடைந்தார். காலை 10:30 மணியளவில், உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு, கண்ணாடி அறையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மாலை 5:30 மணியளவில், சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபஆராதனை காண்பித்து சுவாமியை வழிபட்டனர்.

குமரக்கோட்டம்

ரதசப்தமியான நேற்று, கிருத்திகையும் வந்ததால், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்ரமணிய சுவாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.காலை, மாலையில், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி கேடயத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி வழிபட்டனர்.

திருவேளுக்கை

காஞ்சிபுரம் திருவேளுக்கை அழகிய சிங்கபெருமாள் கோவிலில் ரதசப்தமியையொட்டி நேற்று காலை மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடந்தது. காலை சூரிய உதயத்தின்போது அழகிய சிங்கபெருமாள், சூரிய பிரபையில் எழுந்தருளி கோவில் உட்பிரகார புறப்பாடு நடந்தது.தொடர்ந்து சூரிய பகவான் எதிரில் பெருமாள் எழுந்தருள செய்து மஹா தீபாராதனை நடந்தது. இதில், சூரிய பகவானையும், பெருமாளையும் பக்தர்கள் வழிபட்டனர். தீர்த்த பிரசாதமும், திருப்பாவை சாற்றுமறை நடந்தது.இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன் சந்திரபிரபையில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை