உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வரும் 10ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள்

வரும் 10ல் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்கள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொது விநியோக திட்டம் சார்பில், ஒவ்வொரு மாதமும், தாலுகா வாரியாக கிராமப்புறங்களில் குறைதீர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அந்த வகையில், மே மாதத்திற்கான குறைதீர் முகாம்கள், வரும் 10ம் தேதி, காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.காஞ்சிபுரம் தாலுகாவில் கோவிந்தவாடி கிாமத்திலும், உத்திரமேரூர் தாலுகாவில் பென்னலுார் கிராமத்திலும், வாலாஜாபாத்தில் புளியம்பாக்கத்திலும், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவில் வல்லம் கிராமத்திலும், குன்றத்துாரில் வடக்குப்பட்டு கிராமத்திலும், பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன.இம்முகாம்களில், பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், நகல் குடும்ப அட்டை, மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்ய கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.மேற்படி மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை