உள்ளூர் செய்திகள்

ரேஷன் கடை திறப்பு

உத்திரமேரூர்:'தினமலர்' செய்தி எதிரொலியாக, கடல்மங்கலம் கிராமத்தில், கட்டி முடிக்கப்பட்டு மூன்று மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருந்த புதிய ரேஷன் கடை கட்டடம், பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. உத்திரமேரூர் ஒன்றியம், கடல்மங்கலம் கிராமத்தில், 2024 -- 25 நிதி ஆண்டில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 8.40 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது. புதிய கட்டடம் கட்டப்பட்டு மூன்று மாதங்களாகியும் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் நேற்று வெளியானதை அடுத்து, ரேஷன் கடை கட்டடத்தை, உத்திரமேரூர் தி.மு.க., - - எம்.எல்.ஏ., சுந்தர் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை