உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  வாகன விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல்

 வாகன விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மறியல்

காஞ்சிபுரம்: விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன விபத்தில் இறந்தவரின் உறவினர்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வளர்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 39; தனியார் தொழிற்சாலை ஊழியர். இவர் நேற்று முன் தினம் இரவு வளர்புரம் கிராமத்தில் இருந்து மண்ணுார் கிராமம் நோக்கி, 'பல்சர்' பைக்கில் சென்றார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், உயிரிழந்தார். இறந்தவரின் உடலை, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் உறவினர்கள் நேற்று மதியம், 2:30 மணிக்கு, விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வளர்புரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த, ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி., கீர்த்திவாசன் தலைமையில் போலீசார், இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சு நடத்தினர். விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின், மறியலில் ஈடுபட்டவர்கள் மதியம், 3:30 மணிக்கு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை