உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் புணரமைப்பு பணி மும்முரம்

ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில் புணரமைப்பு பணி மும்முரம்

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஊத்துக்காடு கிராமம். இக்கிராமத்தில், பிரசித்தி பெற்ற பழமையான தேவி எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒருகாலப் பூஜை நடைபெறுகிறது.ஆடி மாத விழா முக்கிய திருவிழாவாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாட்டிற்கு வந்து செல்வது வழக்கத்தில் உள்ளது. ஊத்துக்காடு எல்லையம்மன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறும். அந்த வகையில், 2012ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, 12 ஆண்டுகளுக்கு பின் 2025 பிப்., 2ம் தேதி, கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த ஒரு மாதமாக கோவில் புணரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.ராஜகோபுரம் மற்றும் முன் மண்டபத்திற்கு வண்ணம் தீட்டுதல், மண்டப துாண்களில் அமைந்துள்ள பொம்மைகள் புதுப்பித்தல் போன்ற பணி மும்முரமாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை