உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திடக்கழிவு மேலாண்மை கிடங்கு உத்திரமேரூரில் புதுப்பிக்கும் பணி

திடக்கழிவு மேலாண்மை கிடங்கு உத்திரமேரூரில் புதுப்பிக்கும் பணி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள, 18 வார்டுகளில் 38,000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பையை, தூய்மை பணியாளர்கள் வாயிலாக பேரூராட்சி நிர்வாகம் சேகரித்து வருகிறது.அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை, காஞ்சிபுரம் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதில், மட்கும் குப்பை மற்றும் மட்கா குப்பை என, தரம் பிரித்து அங்குள்ள தொட்டிகளில் கொட்டி வைக்கப்படுகின்றன.பின், மட்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல, மட்கா குப்பையை உடைத்து, தார் சாலை அமைக்கும் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், உத்திரமேரூர் திடக்கழிவு மேலாண்மை கிடங்கை புதுப்பிக்க, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், 15வது நிதிக் குழு மானிய திட்டத்தின்கீழ், 5.5 லட்சம் ரூபாய் செலவில், திடக்கழிவு மேலாண்மை கிடங்கை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை