உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சதனந்தபுரம் சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை

சதனந்தபுரம் சாலையில் தரைப்பாலம் அமைக்க கோரிக்கை

குன்றத்துார்:குன்றத்துார் நகராட்சி, இரண்டாம்கட்டளை ஊராட்சி, சதனந்தபுரம் செல்லும் சாலையின் குறுக்கே 20 அடி அகலத்தில் கால்வாய் உள்ளது.இந்த கால்வாயில், குன்றத்துார், கொல்லச்சேரி, சிக்கராயபுரம், இரண்டாம்கட்டளை பகுதிகளில் இருந்து மழைகாலங்களில் வெள்ள நீர் வெளியேறி அனகாபுத்துாரில் அடையாறு கால்வாயில் கலக்கும்.இந்த கால்வாயில் வெள்ள நீர் வெளியேற போதிய வழி இல்லாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், மழை காலத்தில் இந்த சாலையின் மீது வெள்ள நீர் பெருக்கெடுத்து ஒடும்.கடந்த டிசம்பர் மாதம் பெய்த பெரு மழையில் இந்த சாலையை மூழ்கடித்து வெள்ள நீர் சென்றது. அப்போது, மோட்டார் சைக்கிளில் இந்த வழியே சென்ற இளைஞர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இந்த வழியை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், இந்த கால்வாய் மீதுள்ள சாலையோரம் தடுப்புகள் ஏதும் இல்லை.இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இந்த கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ