உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாசி படர்ந்த குளத்தை துார்வார கோரிக்கை

பாசி படர்ந்த குளத்தை துார்வார கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில், அரசு துவக்கப் பள்ளி அருகே உள்ள தாமரை குளம், அப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், பேரீஞ்சம்பாக்கம் கிராம வாசிகள், குடிநீர் மற்றும் வீட்டு உபயோக தேவைக்காக இந்த குளத்தின் நீரை பயன்படுத்தி வந்தனர்.தற்போது குளம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. குளத்தில் கோரைப்புல் வளர்ந்து, பாசி படர்ந்து குளத்தின் நீர் மாசடைந்து வருகிறது. எனவே, சீரழிந்து வரும் தாமரை குளத்தை துார்வாரி சீரமைத்து, நடைப்பயிற்சி மேற்கொள்ள, நடைப்பாதை அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரீஞ்சம்பாக்கம் கிராமத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி