உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / அமரம்பேடு கூட்டு சாலையில் தடுப்பு அமைக்க கோரிக்கை

அமரம்பேடு கூட்டு சாலையில் தடுப்பு அமைக்க கோரிக்கை

குன்றத்துார்:ஸ்ரீபெரும்புதுார் - குன்றத்துார் நெடுஞ்சாலையில், அமரம்பேடு அருகே இருங்காட்டுக்கோட்டை செல்லும் சாலை இணைகிறது. இந்த சாலை வழியே காட்டரம்பாக்கம், இருங்காட்டுக்கோட்டை, கீவளூர் பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து என, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்நிலையில், அமரம்பேடு கூட்டு சாலை சந்திப்பில் இரண்டு புறங்களில் இருந்தும் வாகனங்கள் வருவதால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, இங்கு தானியங்கி சிக்னல் அல்லது இரும்பு தடுப்புகள் அமைத்து, போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ