வளைவு, கால்வாய் ஒரங்களில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, காவாந்தணடலம் கிராமத்தில் இருந்து, இளையனார்வேலுார் கிாரம சாலை வழியாக, வாலாஜாபாத் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக, வாலாஜாபாதில் இருந்து, கண்ணடின்குடிசை, தம்மனுார், இளையனார்வேலுார், செம்புலம், காவாந்தண்டலம் வழியாக, உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு பல்வேறு கிராமத்தினர் சென்று வருகின்றனர்.அதேபோல, உத்திரமேரூர் கிராமத்தில் இருந்து, காவாந்தண்டலம் வழியாக, வாலாஜாபாதிற்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இந்த சாலையில், 18 இடங்களில் அபாயகரமான வளைவு உள்ளன. இந்த வளைவுகளில், சாலையோர தடுப்புகள் அறவே இல்லை. இதுதவிர, செய்யாற்றில் இருந்து, பிரதான ஏரிகளை நிரப்பும் கால்வாய் ஐந்து இடங்களில் செல்கின்றன.இதுபோன்ற கால்வாயையொட்டிய தரைப்பாலங்களின் ஓரம் தடுப்பு இல்லை.இதனால், வாகன ஓட்டிகள் கால்வாய் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது என, அந்த சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் இடையே புகார் எழுந்துள்ளது.எனவே, காவாந்தண்டலம் - வாலாஜாபாத் இடையே கால்வாய் மற்றும் அபாயகரமான வளைவுகளில் சாலையோர தடுப்பு அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.