உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உறிஞ்சு குழியில் ஏற்பட்ட அடைப்பை நீக்க கோரிக்கை

உறிஞ்சு குழியில் ஏற்பட்ட அடைப்பை நீக்க கோரிக்கை

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பவளவண்ண சுவாமி கோவில் பின்புறம் உள்ள மழைநீர் உறிஞ்சு குழியில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் பவளவண்ண சுவாமி கோவில் தெற்கு மதில்சுவர் பின்புறம் உள்ள தாமல்வார் தெருவில், மழைநீர் வெளியேறும் வகையில் உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பு இல்லாததால், உறிஞ்சு குழியில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உறிஞ்சு குழி மூலம் மழைநீர் வெளியேறாமல், பவளவண்ண சுவாமி கோவில் ஒட்டியுள்ள தெருவில் தேங்கி நிற்கிறது. எனவே, பவளவண்ண சுவாமி கோவில் ஒட்டி யுள்ள தெருவில் மழைநீர் தேங்காமல் இருக்க, தாமல்வார் தெருவில் உள்ள மழைநீர் உறிஞ்சு குழியில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ