அவளூர் ஏரிக்கரையில் வளர்ந்த கருவேல மரங்கள் அகற்ற கோரிக்கை
வாலாஜாபாத், :வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்டது அவளூர் கிராமம். இக்கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 300 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரி நீரைக் கொண்டு அப்பகுதியில் 500 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.இந்த ஏரிக்கான மதகுகள் மற்றும் கலங்கல் பகுதிக்கு, விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ள அப்பகுதி விவசாயிகள் ஏரிக்கரை வழியை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.இந்நிலையில், அவளூர் ஏரிக்கரையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் மற்றும் பல வகை செடி, கொடிகள் அதிகம் வளர்ந்து உள்ளன.இதனால், விவசாயம் சார்ந்த பணிகளுக்காக மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் இயந்திரம் போன்றவற்றை ஏரிக்கரை மீது இயக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.மேலும், ஏரிக்கரையில் வளர்ந்துள்ள இந்த சீமை கருவேல மரங்களால், ஏரி நீர்பிடிப்பு பகுதியில் சேகரமாகி உள்ள தண்ணீரை விரைந்து உறிஞ்சிக் கொள்ளும் நிலை உள்ளதாக புலம்பி வருகின்றனர்.எனவே, அவளூர் ஏரிக்கரையின் இருபுறமும் வளர்ந்துள்ள முள் மரங்களை அகற்றி, ஏரிக்கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.