குண்டுபெரும்பேடு குளத்தை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
ஸ்ரீபெரும்புதுார்: குண்டுபெரும்பேடில், படிக்கட்டுகள் சேத மடைந்து, கோரை புற்கள் வளர்ந்துள்ள கோதுமை குளத்தை, துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், குண்டுபெரும்பேடு ஊராட்சியில், கோதுமை குளம் உள்ளது. இந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குளம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், குளக்கரையின் படிக்கட்டுகள் சேதமடைந்தும், குளம் முழுதும் கோரை புற்கள் வளர்ந்தும் உள்ளன. எனவே, கோதுமை குளத்தை துார்வாரி சீரமைக்க, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.