உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

பள்ளி சுற்றுச்சுவர் சேதம் சீரமைக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, திருமங்கையாழ்வார் சாலையில் உள்ள அரசு உதவிபெறும் சி.எஸ்.ஐ., தொடக்கப் பள்ளியில், 40க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவர் சேதடைந்து விழும் நிலையில் உள்ளது.சிமென்ட் பூச்சு கரைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளதால், பள்ளி வளாகத்தில் விளையாடும் மாணவர்கள் மீது சுற்றுச்சுவர் விழுந்து விபத்து ஏற்படும் அச்சத்தில் மாணவர்கள் உள்ளனர்.எனவே, மாணவர்களின் பாதுகாப்பை கருதி, சேதமான சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து, பள்ளி ஆசிரியர் ஒருவரை கேட்ட போது, 'சேதமான சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை