உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடியிருப்பை சூழ்ந்த மழைநீர் உப்புகுளம்வாசிகள் கடும் அவதி

குடியிருப்பை சூழ்ந்த மழைநீர் உப்புகுளம்வாசிகள் கடும் அவதி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, 20வது வார்டுக்கு உட்பட்ட உப்புகுளம் பகுதியில், 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் முறையான மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 'பெஞ்சல்' புயல் காரணமாக பெய்த மழைக்கு, உப்புகுளம் பகுதியில் குடியிருப்பை சூழ்ந்த மழைநீர் வெளியேறாமல் இருந்தது.இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழைக்கே அப்பகுதியில் மழைநீர் மேலும் அதிகரித்துள்ளது.இரு வாரங்களாக தேங் கும் மழைநீரால், உப்புகுளம் பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.மழைநீரில் உலா வரும் பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் புகுந்து விடுவதாக பகுதிவாசிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, உப்புகுளம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர், அருகில் உள்ள அல்லாபாத் ஏரிக்கு செல்லும் வகையில், மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை