சாலை கழிவுநீரால் தொற்று அபாயம்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாநகராட்சி, 23வது வார்டு திருவள்ளுவர் தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. திருக்காலிமேடு, கே.எம்.வி., நகர், பொய்யாகுளம், டி.கே.நம்பி தெரு, மேட்டு கம்மாள தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு இச்சாலை வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.இப்பகுதியில் அடிக்கடி வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சின்ன காஞ்சிபுரம், திருவள்ளுவர் தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பைமுழுதும் நீக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.