உத்திரமேரூரில் சாலை மறியல்
உத்திரமேரூர்:துாத்துக்குடி கவின் ஆணவ படுகொலையை கண்டித்து, வி.சி., சார்பில், உத்திரமேரூரில் , சாலை மறியல் நடந்தது. உத்திரமேரூர் பேருந்து நிலையம் முன் நேற்று நடந்த சாலை மறியலுக்கு, காஞ்சிபுரம் வி.சி., மாவட்ட செயலர் எழிலரசு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர் வின்சென்ட், நகர செயலர் முருகன் முன்னிலை வகித்தனர். அதில், ஆணவ படுகொலையை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின், உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினார். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.