உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மழையால் சேதமான சாலை நெ.சா.துறையினர் சீரமைப்பு

மழையால் சேதமான சாலை நெ.சா.துறையினர் சீரமைப்பு

காஞ்சிபுரம் : வங்க கடலில் உருவான 'பெஞ்சல்' புயல் காரணமாக, காஞ்சிபுரத்தில் இரு நாட்களாக பலத்த மழை பெய்தது. காஞ்சிபுரம் நகரின் பிரதான சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்தது. இதனால், இருசக்கரவாகன ஓட்டிகளும், பாத சாரிகளும் கடும் அவதிப்பட்டு வந்தனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து காஞ்சி புரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை தெரு, சங்கரமடம் அருகில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில், தார் ஊற்றி 'பேட்ச் ஒர்க்'பணியாக சாலை சீரமைக்கப்பட்டது.அதேபோல, காஞ்சி புரம் -- வந்தவாசி சாலையில், மழையால் ஆங்காங்கே சேதமடைந்த சாலையையும், தார் மற்றும்ஜல்லி கற்கள் கலவை வாயிலாக 'பேட்ச் ஒர்க்' பணியாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை சீரமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி