| ADDED : ஜன 30, 2024 03:45 AM
காஞ்சிபுரம், : தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை ஒட்டி, நேரு யுவ கேந்திரா இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில், காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக, மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம், கல்லுாரியில் உள்ள நாட்டு நலப்பணித் திட்டத்தை சேர்ந்த 25 தன்னார்வல மாணவர்களை தேர்வு செய்து, அதே கல்லுாரி கூட்ட அரங்கில், காட்சி படம் வாயிலாக பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தார்.மாணவ- - மாணவியரின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். மாணவ- - மாணவியர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.