உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

வாலாஜாபாத், வாலாஜாபாதில் தனியார் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இதில், ஒரகடம் பகுதி தனியார் தொழிற்சாலைகளில் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள்மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.சீட் பெல்ட் அணிவதன் அவசியம், அதிவேகத்தால் ஏற்படும் விளைவுகள், ஹெல்மெட் கட்டாயம் அணிதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது.வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே துவங்கிய இப்பேரணி, வாலாஜாபாத் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.இதில், வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் சங்கர் பங்கேற்று போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விளக்கி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்