உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மேல்கதிர்பூரில் சாலை விரிவாக்க பணி

மேல்கதிர்பூரில் சாலை விரிவாக்க பணி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், மேட்டுகுப்பம் -- பெரும்பாக்கம் சாலை 8 கி.மீ., நீளமும், 3.75 மீட்டர் அகலமும் கொண்டது.அகலம் குறைவான இச்சாலையில், எதிரெதிரே இரு கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இதனால், இச்சாலையை அகலப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, மேட்டுகுப்பம் -- பெரும்பாக்கம் சாலை 3.30 கோடி ரூபாய் செலவில் சாலை 3.75 மீட்டர் அகலம் கொண்ட சாலை, 5.5 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் பணி கடந்த ஆண்டு முடிந்தது.தற்போது, இரண்டாவது கட்டமாக, மேல்கதிர்பூரில் இருந்து, மேல்ஒட்டிவாக்கம் வரையிலான 4 கி.மீ., நீளத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.இச்சாலையில், இரு இடங்களில் மழைநீர் செல்லும் சிறுபாலம் கட்டுமானப் பணியும் நடந்து வருகிறது என, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் விஜய் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை