உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோர பேனரால் உத்திரமேரூரில் அபாயம்

சாலையோர பேனரால் உத்திரமேரூரில் அபாயம்

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், பிரதான சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்களை அகற்ற, வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூரில், காஞ்சிபுரம் சாலை, புக்கத்துறை சாலை, மானாம்பதி சாலை, எல்.எண்டத்துார் சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன. இந்த பிரதான சாலைகளை பயன்படுத்தி சுற்றுவட்டார கிராமத்தினர், உத்திரமேரூரில் உள்ள அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையம், மருத்துவமனைகள் ஆகிய பகுதிகளுக்கு, வாகனங்களில் தினமும் வந்து செல்கின்றனர்.இந்நிலையில், பிரதான சாலையோரங்களில் அரசியல் கட்சி, பள்ளிகள், ரியல் எஸ்டேட், பேக்கரி கடைகள் ஆகியவற்றின் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.அதேபோல, மின் கம்பங்களில் வைக்கப்படும் பேனர்கள் காற்று வீசும்போது கிழிந்து, மின் கம்பிகளின் மீது உரசி மின் தடை ஏற்படும் சூழல் உள்ளது. சாலையோரங்களில் பேனர் வைப்பது குறித்து, நீதிமன்றம் வெளியிட்டுள்ள வழிக்காட்டு நெறிமுறைகள், காற்றில்பறக்கவிடப்படுகின்றன.எனவே, சாலையோரங்களில் வைக்கப்படும் பேனர்களை அகற்ற, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை