| ADDED : பிப் 17, 2024 11:50 PM
ஓட்டேரி, ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் வசிப்பவர் அஸ்வின் ஷா, 40. இவர், சவுகார்பேட்டை, வீரப்பன் தெருவில் நகை வியாபாரம் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் கர்நாடகா சென்றார்.இந்த நிலையில், இவரது வீட்டின் படுக்கையறையில் உள்ள அலமாரியை உடைத்து, 150 கிராம் தங்கம் மற்றும் 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அஸ்வின் ஷா தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்படவில்லை.இந்த நிலையில், வீட்டில் உள்ள கேமராவை பரிசோதித்தபோது, கடந்த 12ம் தேதி இரவு 9:40 மணியளவில், 'வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர் ஒருவர் நகை, பணத்தை திருடிச் சென்று உள்ளார்' என, ஓட்டேரி போலீசில் அஸ்வின் ஷா புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.