உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் விதிமீறிய வாகனங்களுக்கு ஒரே நாளில் ரூ.7.50 லட்சம் அபராதம்

காஞ்சியில் விதிமீறிய வாகனங்களுக்கு ஒரே நாளில் ரூ.7.50 லட்சம் அபராதம்

காஞ்சிபுரம்:நாடு முழுதும், 35வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா ஜன., 15 முதல் பிப்., 14 வரை நடக்கிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் காஞ்சிபுரம், சாலவாக்கம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதியில், அப்பகுதி போலீசாருடன் இணைந்து வாகன தணிக்கை செய்தார்.இதில், ஏழு வாகனங்கள் விதியை மீறி அதிக சுமை ஏற்றி வந்ததற்காக, 3 லட்சத்து 49,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.'ஷேர் ஆட்டோ' மற்றும் 'மேக்ஸி கேப்' வாகனத்தில், அதிக எண்ணிக்கையில் பள்ளி குழந்தைகள் ஏற்றியதற்காகவும், வாகனத்திற்கு தகுதிச்சான்று, சாலை வரி முறையாக கட்டாமல் இருந்த மூன்று மேக்சி கேப் வேன்களையும் சிறைபிடித்தார்.அந்த வாகனங்களை வாலாஜாபாத் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, 4 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதன் வாயிலாக, நேற்று ஒரே நாளில், விதிமீறிய வாகனங்களுக்கு 7 லட்சத்து 49,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ