உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் வாலாஜாபாத்தில் பேரணி

ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் வாலாஜாபாத்தில் பேரணி

வாலாஜாபாத்:ஆர்.எஸ்.எஸ்., தொடங்கப்பட்டு 99 ஆண்டு நிறைவடைந்து, தற்போது 100ம் ஆண்டு துங்குகிறது. நூற்றாண்டு கொண்டாட்ட விதமாக தமிழகத்தில் 57 இடங்களில் இன்று அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன.அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் சீருடை அணிந்த 150க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களின் பேரணி நடந்தது.வாலாஜாபாத், ரவுண்டனா அருகில் கொடி ஏற்றத்துடன் துவங்கி ஊர்வலமாக ராஜவீதி, சிவன் படைவீதி மற்றும் பஜனைக்காரத்தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.நிறைவாக வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, ஆர்.எஸ் .எஸ், காஞ்சிபுரம் மாவட்ட இணை தலைவர் டாக்டர் அரவிந்தன் முன்னிலையில், கோட்ட தலைவர் ஏழுமலை, சிறப்பு விருந்தினர் சத்யானந்தா ஜி ஆகியோர் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்தது.ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு பேரணியையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி., சண்முகம் தலைமையில், ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி., மற்றும் ஆய்வாளர்கள், காவலர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், தீயணைப்பு வீரர்கள், 108 அவசர ஊர்தி என, இந்த பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ