மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு..
18-Aug-2025
ஆடி வெள்ளி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
16-Aug-2025
காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, 1,008 அகல் விளக்கில் தீபம் ஏற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவை நேற்று விமரிசையாக நடந்தது காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், மாதந்தோறும் அஷ்டமி தினத்தன்று சஹஸ்ர தீபம் ஏற்றி காமாட்சியை பெண்கள் வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியான நேற்று கோவில், வசந்த மண்டபத்தில் திரளான பெண்கள் 1,008 அகல் விளக்குகளை ஏற்றும் சஹஸ்ர தீப அலங்கார சேவைக்காட்சி நடைபெற்றது. இதில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் அலங்கார மண்டபத்திலிருந்து வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். கோவில் ஸ்தானீகர்களால் புஷ்பாஞ்சலியும், வேத விற்பன்னார்களால் வேதபாரயணமும், தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடந்தது.
18-Aug-2025
16-Aug-2025