உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  சாலவாக்கம் புதிய ஒன்றியமாக உதயம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 சாலவாக்கம் புதிய ஒன்றியமாக உதயம் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து புதிதாக சாலவாக்கம் ஒன்றியம் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சாலவாக்கம் ஒன்றிய தி.மு.க., சார்பில், இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 73 ஊராட்சிகளில், சாலவாக்கத்தை தலைமையாக கொண்டு புதிய ஒன்றியம் அறிவித்து நேற்று முன்தினம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, 40 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறியதாக தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சாலவாக்கத்தில் தி.மு.க., சார்பில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. சாலவாக்கம் பஜார் வீதியில் நடந்த நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் சாலவாக்கம் தி.மு.க., ஒன்றிய செயலர் குமார் ஆகியோர் பங்கேற்று பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில், தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் சாலவாக்கம் சுற்றுவட்டார உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி