உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி மாணவர்கள் களப்பயணம் துவக்கம்

பள்ளி மாணவர்கள் களப்பயணம் துவக்கம்

காஞ்சிபுரம்:பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் கல்லுாரி களப்பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2 பயிலும், அரசு பள்ளி மாணவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளுக்கு கல்லுாரி களப்பயணம் அழைத்துச் செல்லுமாறு, பள்ளி கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த கல்லுாரி களப்பயணத்தின் அனுபவமானது மாணவர்களின் உயர்கல்வி குறித்த அச்சம், குழப்பங்களை களைந்து, உயர்கல்வி அனைவருக்கும் சாத்தியம் என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் உருவாகும் என்ற நோக்கில் துவங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 49 அரசு பள்ளிகளில் இருந்து 3,427 பள்ளி மாணவ, மாணவியரை கல்லுாரிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராணி அண்ணாதுரை மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் காஞ்சிபுரம் கீழம்பி பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்.எஸ்.கே.வி., பெண்கள் கல்லுாரிக்கு நேற்று களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர். இந்த பயணத்தை கலெக்டர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை