மேலும் செய்திகள்
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழா துவக்கம்
8 minutes ago
சிறுதாமூர் ஏரியை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
13 minutes ago
சாலையோர பள்ளத்தால் மணியாட்சியில் விபத்து அபாயம்
14 minutes ago
ஸ்ரீபெரும்புதுார்: பள்ளிக்கல்வி துறை சார்பில் நடந்த இலக்கிய மன்ற போட்டிகளில், படப்பை அரசு பள்ளி மாணவியர் இஷாந்தினி மற்றும் அப்ரீனா இருவேறு பிரிவுகளில் மாநில அளவில் முதல் இடம் பிடித்து அசத்தியுள்ளனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் 6 - 9ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலக்கியம், வினாடி - வினா, சிறார் திரைப்படம் மன்றங்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில், வெற்றி பெறும் மாணவ, மாணவியர் வெளிநாடு சுற்றுலா செல்லும் வாய்ப்பு பெறுகின்றனர். இந்தாண்டிற்கான மன்றப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மதுரை, கோவை, திருச்சியில் மாநில போட்டிகள் நடந்தன. மதுரையில் நடந்த 8ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில், காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி இஷாந்தினி, சிறார் திரைப்பட போட்டியில், ஒளிப்பதிவு பிரிவில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தார். அதேபோல், கோவையில் நடந்த 6 மற்றும் 7 ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில், ஏழாம் வகுப்பு மாணவி அப்ரீனா, இலக்கிய மன்ற தமிழ் கட்டுரை பிரிவில் மாநில அளவில் முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியர் இருவரையும் படப்பை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளா பாராட்டினார். சிறார் திரைப்பட போட்டியின் பொறுப்பாளர் ஆசிரியர் அன்சாரி, இலக்கிய போட்டி பொறுப்பாளர் ஆசிரியை தமிழ்செல்வி இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
8 minutes ago
13 minutes ago
14 minutes ago