உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தொடர் விடுமுறை: சிப்காட் வெறிச்

தொடர் விடுமுறை: சிப்காட் வெறிச்

இருங்காட்டுக்கோட்டை:காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைப்பாக்கம், வல்லம், ஒரகடம் ஆகிய ஐந்து பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்கா அமைந்துள்ளது.இங்கு, தமிழகத்தின் பல மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தங்கி பணியாற்றி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 70 சதவீதத்திற்கு மேலான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.இதனால், கடந்த 14ம் தேதி முதல், 17ம் தேதி வரை இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்கா பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் விடுமுறை அளிக்கப்பட்டதாலும், சில தொழிற்சாலைகள் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களை கொண்டு இயங்கி வருகின்றன.இதனால், வாகன போக்குவரத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சிப்காட் பகுதிகள், அங்குள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை