உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் மேயர் வார்டு சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம் மேயர் வார்டு சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியின் வார்டான ஒன்பதாவது வார்டுக்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில், சந்தவெளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டியுள்ள தெருவில், 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, இரு மாதத்திற்கும் மேலாக ‛மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி, 10வது வார்டான உப்பேரிகுளம் தெரு வழியாக சென்று, சமீபத்தில் சீரமைக்கப்பட்ட உப்பேரி குளத்திற்கு மழைநீர் செல்லும் கால்வாய் வாயிலாக ் கழிவுநீர் கலக்கிறது. இதனால், பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட உப்பேரி குளத்தில் கழிவுநீர் கலப்பதால், குளத்து நீரும், அப்பகுதி நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது.மாத கணக்கில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், உப்பேரி குளம் தெருவினருக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு, காய்ச்சல் ஏற்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.இப்பகுதியினரும், சந்தவெளி அம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களும் கழிவுநீரில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதால், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி வார்டில், தொற்றுநோய் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, உப்பேரிகுளம் தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கவும், சாலை வசதி ஏற்படுத்தவும் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ