உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பரந்துார் கூட்டு சாலையில் வழிகாட்டி பலகை தேவை

பரந்துார் கூட்டு சாலையில் வழிகாட்டி பலகை தேவை

காஞ்சிபுரம்;பரந்துார் கூட்டு சாலையில், நெடுஞ்சாலைத் துறையினர் வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, இதர சாலை என, மொத்தம், 2,253 கி.மீ., சாலைகள் உள்ளன. இதுதவிர, 1,292 கி.மீ., ஒன்றிய சாலைகள், 1,694 கி.மீ., ஊராட்சி சாலைகள் என, மொத்தம் 5,239 கி.மீ., சாலை வகைபாடுகள் உள்ளன. இதில், வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும், சாலைகளில் அந்தந்த துறை சார்ந்த திட்டங்களில், சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், பள்ளூர் - சோகண்டி இடையே, ஒருவழி சாலையை, 41 கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட்ட இருவழி சாலையாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளன. அதேபோல, பரந்துார் - -பொன்னேரிக்கரை இடையே சாலையும் விரிவு படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பள்ளூர் - -சோகண்டி மற்றும் பரந்துார் - -பொன்னேரிக்கரை சாலைகள் இணையும் மூன்று வழி சாலை உள்ளது. இங்கு, போதிய வழிகாட்டி பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் திசைமாறி செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து, வளத்துாருக்கு, இடதுபுறம் சாலையில் திரும்பி செல்வோர், வலதுபுற சாலை வழியாக ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கமாபுரம் வழியாக சுற்றி வளத்துார் செல்ல வேண்டி உள்ளது. எனவே, பரந்துார் கூட்டு சாலையில், நெடுஞ்சாலைத் துறையினர் வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை