மேலும் செய்திகள்
60 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
11-Jan-2026
ஆர்.கே.பேட்டை: தந்தைக்கு திதி கொடுக்க ஸ்கூட்டரில் சென்ற மகன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். ஆர்.கே.பேட்டை அடுத்த விடியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி, 73. இவர், தை அமாவாசை தினமான நேற்று, தந்தைக்கு திதி கொடுப்பதற்காக, விடியங்காடு கிராமத்தில் இருந்து சோளிங்கருக்கு, 'டி.வி.எஸ்., ஜூபிடர்' ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். சகஸ்ரபத்மாபுரம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வேன் மீது, இவரது ஸ்கூட்டர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குப்புசாமி, சம்பவ இடத்திலேயே பலியானார். விரைந்து வந்த ஆர்.கே.பேட்டை போலீசார், குப்புசாமியின் உடலை மீட்டு, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
11-Jan-2026