274 ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம்
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில் 274 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில் இன்று, சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அந்தந்த ஊராட்சிகளுக்கு, பி.டி.ஓ.,க்கள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.குறிப்பாக, முதல்வரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தில் தேர்வு செய்த பயனாளிகள் குறித்து, இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.