உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காஞ்சியில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், பொது சுகாதாரம் மற்றும் மாநகராட்சி சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் காஞ்சிபுரத்தில் நாளை, நடக்கிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் காஞ்சிபுரம் ஓரிக்கை, அரசு நகரில் உள்ள விக்டோரிய மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், நாளை, காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை நடக்கிறது. இதில், பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, மகளிர், மகப்பேறு, இதயம், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், முடநீக்கியல், நுண்கதிர், நுரையீரல், சர்க்கரை, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இம்மருத்துவ முகாமில் பங்கேற்போருக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படும். கர்ப்பிணியருக்கு ஸ்கேன், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை