உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எஸ்.ஆர்.எம்., - ராணி மேரி மகளிர் வாலிபாலில் அபாரம்

எஸ்.ஆர்.எம்., - ராணி மேரி மகளிர் வாலிபாலில் அபாரம்

சென்னை : பி.என்.எத்திராஜ் முதலியார் அறக்கட்டளை சார்பில், கல்லுாரி அணிகளுக்கான மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டி, சென்னை ராணி மேரி கல்லுாரியில் நடந்து வருகிறது.போட்டியில், எஸ்.ஆர்.எம்., - ராணிமேரி, மதுரை அமெரிக்கன் கல்லுாரி, ஈரோடு பி.கே.ஆர்., - ஜேப்பியார், வேல்ஸ் பல்கலை ஆகிய ஆறு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 15 போட்டிகள் விதம் விளையாடுகின்றன.நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்., - வேல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்., அணி 25 - 20, 25 - 9 என்ற நேர் செட்டில் வேல்ஸ் பல்கலையை தோற்கடித்தது.ராணி மேரி கல்லுாரி, 19 - 25, 25 - 23, 25 - 22 என்ற கணக்கில் மதுரை அமெரிக்கன் அணியை வீழ்த்தியது. போட்டிகள் தொடர்ந்து நாளை வரை நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி