உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கபடியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன் பைனலில் ஈரோடு கிளப் அணியை வீழ்த்தியது

கபடியில் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன் பைனலில் ஈரோடு கிளப் அணியை வீழ்த்தியது

சென்னை மாநில அளவிலான கபடி போட்டியில், சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி சாம்பியன் கோப்பை வென்று அசத்தியது.ஆடவருக்கான மாநில அளவிலான கபடி போட்டி, புதுக்கோட்டையில் உள்ள பரம்பூர் பகுதியில், கடந்த இரண்டு நாட்கள் நடந்தன.போட்டியில், சென்னை உட்பட மாநிலம் முழுதும் இருந்து கல்லுாரி, கிளப் மற்றும் ஏரியா அணிகள் பங்கேற்றன. லீக் போட்டிகளில் அசத்திய சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, காலிறுதி ஆட்டத்தில், உள்ளூர் அணியான பரம்பூர் கிளப் அணியை எதிர்கொண்டது.உள்ளூர் அணியுடன் மோதிய ஆட்டம் என்பதால் ஆயிரக்கணக்கானோர் போட்டியை கண்டுகளித்தனர். 'கில்லி'யாக களமிறங்கிய எஸ்.ஆர்.எம்., வீரர்கள் 28 - 17 என்ற புள்ளிக்கணக்கில் பரம்பூர் கிளப் அணியை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது.தொடர்ந்து நடந்த அரையிறுதி ஆட்டத்தில், மணப்பாறை கிளப் அணியை 22 - 20 என்ற கணக்கில் தோற்கடித்தது.இதையடுத்து, இறுதிப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை மற்றும் ஈரோடு ஜி.எல்., கிளப் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எஸ்.ஆர்.எம்., வீரர்களின் அனல்பறக்கும் ஆட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், ஈரோடு அணி துவக்கத்திலேயே திணறியது.முடிவில், 24 - 05 என்ற கணக்கில் எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை