உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ரயிலில் அடிபட்டு மாணவர் பலி

ரயிலில் அடிபட்டு மாணவர் பலி

திருவொற்றியூர்,:திருவொற்றியூர், கலைவாணர் நகரைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் லோகேஷ், 15; ஜெய்கோபால் கரோடியா அரசினர் பள்ளியில், 10ம் வகுப்பு படித்தார்.நேற்று மாலை, 3:30 மணியளவில் சிற்றுண்டி வாங்க, பள்ளியை விட்டு வெளியே வந்த லோகேஷ், பள்ளியின் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.அப்போது, அவ்வழியே சென்ற விரைவு ரயில் ஒன்று, அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். மாணவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை