| ADDED : ஜூலை 02, 2024 02:44 AM
சுரங்கப்பாதை சாலை சீரமைக்கப்படுமா?காஞ்சிபுரம் ரயில்வே சாலை - அசோக் நகர் இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையின் கீழ், மினி சுரங்கப்பாதை உள்ளது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சென்று வருகின்றனர்.பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் நிறைந்த மினி சுரங்கப்பாதையின் உட்புற சாலை பள்ளமாக உள்ளதால், சாதாரண மழைக்கே, சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் சகதி நீராக மாறியுள்ளதால், நடந்து செல்வோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை சேதமடைந்த பகுதியில், நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே,சேதமடைந்த சுரங்கப்பாதை சாலையை சீரமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ். முத்துகுமார், காஞ்சிபுரம்.