உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மூடாத லாரிகளில் இருந்து பறக்கும் குப்பையால் அவதி

மூடாத லாரிகளில் இருந்து பறக்கும் குப்பையால் அவதி

குன்றத்துார்:தாம்பரம் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பை, லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு, செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் கிராமத்தில் கொட்டப்படுகிறது.குப்பை ஏற்றி செல்லும் லாரிகள், வண்டலுார் - ஒரகடம் நெடுஞ்சாலையில், படப்பை, ஒரகடம் வழியாக ஆப்பூர் செல்கின்றன.இந்நிலையில், லாரிகளில் அளவுக்கு அதிகமாக குப்பையை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக செல்வதால், குப்பை காற்றில் பறந்து, சாலையில் விழுகிறது.வாகன நெரிசல்களில் நிற்கும்போது, குப்பையில் இருந்து வீசும் துர்நாற்றத்தால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.எனவே, குப்பையை தார்ப்பாய் மூலம் முழுமையாக மூடி எடுத்துச் செல்ல, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ