உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

கோடை விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

காஞ்சிபுரம்:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமை கடந்த மாதம் 25ம் தேதி மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி துவக்கி வைத்தார்.தினமும், காலை 6:30 மணி முதல், 8:30 மணி வரையும், மாலை 4:30 முதல், 6:30 மணி வரை தடகளம், இறகுபந்து, கைப்பந்து, ஜூடோ, கபடி, டென்னிஸ், கால்பந்து, ஹாக்கி மற்றும் கூடைபந்து உள்ளிட்ட விளையாட்டுகள் நடந்தன.இப்பயிற்சி முகாமில், 444 மாணவ - மாணவியர் பங்கேற்று பயிற்சியை நிறைவு செய்தனர். பயிற்சியை நிறைவு செய்த மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில், மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், பயிற்சியை நிறைவு செய்த மாணவ - மாணவிருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை